1. Home
  2. வர்த்தகம்

நீங்கள் எஸ்.பி.ஐ வாடிக்கையாளரா..? இதோ வங்கியின் அதிரடி சலுகைகள்!

நீங்கள் எஸ்.பி.ஐ வாடிக்கையாளரா..? இதோ வங்கியின் அதிரடி சலுகைகள்!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான எஸ்.பி.ஐயில் பல்வேறு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது ரூ.25,000க்கும் அதிகமாக வங்கிக்கணக்கில் இருப்புத்தொகை வைத்திருப்பவருக்கு ஏடிஎம்-இல் வரம்பற்ற பணப்பரிவர்த்தனை(Unlimited Transaction) வழங்கப்படுகிறது.

எஸ்.பி.ஐ வங்கி பணப்பரிவர்த்தனை நிபந்தனைகள் மற்றும் அதற்கான அபராத கட்டணங்கள்:

► மெட்ரோ நகரங்களில் வழக்கமாக ஒரு மாதத்திற்கு 8 முறை ஏடிஎம்-இல் பணம் எடுத்துக்கொள்ளலாம். அதாவது எஸ்.பி.ஐ ஏடிஎம்-இல் 5 முறையும், மற்ற ஏடிஎம்-இல் 3 முறையும் எடுத்துக்கொள்ளலாம்.

► மெட்ரோ அல்லாத நகரங்களில், எஸ்.பி.ஐ ஏடிஎம்-இல் 5 முறை, இதர ஏடிஎம்-இல் 5 முறை என மாதத்திற்கு 10 முறை பணம் எடுத்துக்கொள்ளலாம்.

► மேற்குறிப்பிட்டதை தாண்டி, அதிகமுறை பணம் எடுப்பவருக்கு ரூ. 5 முதல் ரூ.20 வரை + ஜிஎஸ்டி அபராத கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

► வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்கில் ரூ.25,000க்கும் அதிகமாக இருப்புத்தொகையை வைத்திருந்தால் அவர்களுக்கு ஒரு சலுகை வழங்கப்படுகிறது. கடந்த மாதம் முழுவதும் ரூ.25,000க்கும் அதிகமாக இருப்புத்தொகையை வைத்திருந்தால், அவர்கள் நடப்பு மாதத்தில் எஸ்.பி.ஐ & எஸ்.பி.ஐ குரூப் ஏடிஎம்-இல் எவ்வளவுமுறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம்.

► ரூ.25,000க்கும் குறைவாக இருப்புத்தொகை வைத்திருப்பவர்கள் வழக்கம் போல் 8 முதல் 10 முறை ஏடிஎம்-இல் பணம் எடுத்துக்கொள்ளலாம்.

► எஸ்.பி.ஐ வங்கி குரூப் ஏடிஎம் களில் மேற்குறிப்பிட்ட முறைக்கு அதிகமாக பணம் எடுப்பவர்க்கு ரூ.10 வரை அபராத கட்டணமாக வசூலிக்கப்படும். எஸ்.பி.ஐ தவிர மற்ற ஏடிஎம் களில் குறிப்பிட்ட தடவைக்கு அதிகமாக பணம் எடுத்தால் ரூ.20 வரை அபராத கட்டணமாக வசூலிக்கப்படும்.

► வங்கிக்கணக்கில் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக இருப்புத்தொகையை வைத்திருப்பவருக்கு எஸ்.பி.ஐ மற்றும் அனைத்து ஏடிஎம்-களிலும் எவ்வளவு முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு எந்த அபராத கட்டணமும் இல்லை.

► எஸ்.பி.ஐயில் வேலை ஊதியம் வரும் வங்கிக்கணக்கிற்கும்(Salary Account) அனைத்து ஏடிஎம்-களிலும் வரையற்ற பணம் பெறும் வசதி உள்ளது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like