புத்தாண்டில் ஏற்றம்கண்ட பங்குச் சந்தை!

புத்தாண்டின் முதல் நாளான இன்று, மும்பை பங்குச் சந்தையில் 186 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையில் 48 புள்ளிகளும் ஏற்றத்துடன் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆண்டின் தொடக்க நாளான இன்று காலை முதலே பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டது.
 | 

புத்தாண்டில் ஏற்றம்கண்ட பங்குச் சந்தை!

புத்தாண்டின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை, மும்பை பங்குச் சந்தையில் 186 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையில் 48 புள்ளிகளும் ஏற்றத்துடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

ஆங்கில புத்தாண்டின் தொடக்க நாளான இன்று காலை முதலே பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டது. மாலை வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 186 புள்ளிகள் உயர்ந்து, 36,254 புள்ளிகளுடனும், தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி குறியீட்டு எண்  48 புள்ளிகள் அதிகரித்து 10,910 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவடைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனே காணப்பட்டன. குறிப்பாக பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக விலைக்கு வாங்கப்பட்டன.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP