1. Home
  2. வர்த்தகம்

பங்குச்சந்தை தொடர் சரிவு... சென்செக்ஸ் 560 புள்ளிகள் இறங்கியது!

பங்குச்சந்தை தொடர் சரிவு... சென்செக்ஸ் 560 புள்ளிகள் இறங்கியது!


மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து பங்குச்சந்தைகள் வரலாறு காணாத அளவில் சரிவை சந்தித்து வருகின்றது. இன்று பங்குச்சந்தை வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 561.22 புள்ளிகள் குறைந்து 34,195.94 என்று இருந்தது. இன்று அதிகபட்சமாக 34,521.01 என்ற அளவுக்கு பங்குச் சந்தை சென்றது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 168.30 புள்ளிகள் குறைந்து 10,498.25 புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக 10,594.15 என்ற புள்ளிகளை எட்டியிருந்தது.

இன்றைய வர்த்தகத்தின்போது, டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, எல்& டி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை சிறிதளவு ஏற்றம் கண்டன. டிசிஎஸ், பஜாஜ் ஆட்டோ, டாக்டர் ரெட்டி லேப்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ் என பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

newstm.in

Trending News

Latest News

You May Like