3 மாதங்கள் காணாத சரிவில் பங்குச்சந்தை!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவதை தொடர்ந்து, இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 550 புள்ளிகள் சரிவை கண்டது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 150 புள்ளிகள் சரிந்தது.
 | 

கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி பங்குச்சந்தை புள்ளிகள் இன்று சரிவை கண்டன. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதும், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பதும் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் 3 நாள் கொள்கை கூட்டம் இன்று துவங்கியதும், முதலீட்டாளர்கள் மத்தியில் மந்தமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், 550.51 புள்ளிகள் சரிந்து, 35,975.63 புள்ளிகளில் முடிந்தது. அதேபோல, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 150.05 புள்ளிகள் சரிந்து சந்தை மூடும் போது, 10,858.25 புள்ளிகளாக முடிந்தது. 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP