பங்குசந்தை: 2 நாட்களுக்கு பிறகு ஏற்றம் கண்ட சென்செக்ஸ்

இன்று மும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்ஸ் தொடக்கம் முதல் ஏற்றத்தை கண்டது
 | 

பங்குசந்தை: 2 நாட்களுக்கு பிறகு ஏற்றம் கண்ட சென்செக்ஸ்

அமெரிக்கா- சீனா இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மும்பை மற்றும் தேசிய பங்குகளின் புள்ளிகள் வீழ்ச்சியடைந்தன. 

இந்நிலையில் இன்று மும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்‌ஸ் தொடக்கம் முதல் ஏற்றத்தை கண்டது. 35,329.61 என தொடங்கிய சென்செக்ஸ் பகல் 12.05 மணியளவில் 174 புள்ளிகள் அதிகரித்து, 35,460.97ஆக இருந்தது. தேசிய பங்குசந்தையான நிஃப்டி இன்று 45 புள்ளிகள் வரை அதிகரித்து 35,481.91 வர்த்தகமாகியது. 

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களின் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள வேதாந்தா உட்பட ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல் நிறுவனங்கள் லாபம் பெற்றன. 

சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ. 79.16, டீசல் ரூ. 71.54 என விற்பனையாகிறது. அமெரிக்க டாலருக்கான இந்திய மதிப்பு: ரூ. 68.07

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: 

சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ. 29, 510ஆக விற்பனையாகிறது. வெள்ளி 10 கிராம் ரூ.432க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 43200.


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP