1. Home
  2. வர்த்தகம்

பெட்ரோல் விலை 21 பைசா குறைவு!

பெட்ரோல் விலை 21 பைசா குறைவு!

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்ரு 21 பைசாவும், டீசல் விலை 24 பைசாவும் குறைத்து விற்கப்படுகிறது.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.62-க்கும், டீசல் ரூ.66.59-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் திங்கள்கிழமை பெட்ரோல் 21 பைசாக்கள் குறைக்கப்பட்டு ரூ.71.41 -க்கும், டீசல் 24 பைசாக்கள் குறைந்து ரூ.66.35-க்கும் விற்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து, தற்போது ஒரு பேரல் சுமார் 50 அமெரிக்க டாலருக்கு (3,496 ரூபாய்) விற்கப்படுகிறது.

இதன் பயனாக, வரும் நாள்களில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like