1. Home
  2. வர்த்தகம்

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சில நாள்கள் இடைவெளிக்கு பிறகு, சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நேற்று சற்று குறைக்கப்பட்ட நிலையில், இன்று அவற்றின் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல், நேற்றைய விலைக்கே விற்கப்படுகின்றன.

சென்னையில் கடந்த ஜனவரி 22 -ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை, அதாவது 7 நாள்களுக்கு பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் லிட்டர் ரூ.73.99-க்கு விற்கப்பட்டு வந்தது.

இதேபோன்று டீசல் விலையிலும் கடந்த மூன்று நாள்களாக ஏற்ற, இறக்கம் இல்லாமல், ஒரு லிட்டர் ரூ.69.72-க்கு விற்கப்பட்டு கொண்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று இரு எரிப்பொருள்களின் விலையிலும் முறையே 9 காசுகள், 11 காசுகள் குறைக்கப்பட்டு அவை ரூ.73.90, ரூ.69.61-க்கு விற்கப்பட்டு வந்தன.

இன்றும் இவற்றின் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எரிபொருள்களின் விலையில் எவ்வித ஏற்ற, இறக்கமும் இல்லாமல், அவை நேற்றைய விலைக்கே விற்கப்படுகின்றன.

அதாவது இன்றும் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.90-க்கும், டீசல் ரூ.69.61-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பொதுத் துறை நிறுவனமான ஐஓசியின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like