1. Home
  2. வர்த்தகம்

சரிவிலிருந்த மீண்ட பங்கு சந்தை விர்...


சில நாட்களா தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த பங்குச் சந்தைகள், சரிவிலிருந்து மீண்டதோடு மட்டுமின்றி, அதிக புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நடப்பதால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த வார இறுதி முதலே, பங்குச் சந்தையில் கடும் சரிவு காணப்பட்டது. தேசிய மற்றும் மும்பை பங்கு சந்தைகளின், நிறுவனங்களின் பங்கு விலையில் ஏற்பட்ட சரிவால், இரு சந்தைகளின் குறியீட்டெண்டும் கடுமையாக சரிந்தன.

நேற்றும், பங்குச் சந்தை நிலவரம், வாடிக்கையாளர்களுக்கு சாகமாக அமையவில்லை. இதற்கிடையே, இன்றைய வர்த்தகத்தில், சந்தையின் போக்கு, முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய பங்கு சந்தை குறியீட்டெண் நிப்டி, 116 புள்ளிகள் உயர்ந்து, 10,856 புள்ளிகளுடன் வர்த்தகம் நடந்து வருகிறது. அதே போல், மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், 365 புள்ளிகள் உயர்ந்து, 36,219 புள்ளிகளுடன் வர்த்தகம் நடக்கிறது.

உள்நாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்ததே, சந்தையில் இன்று ஏற்பட்ட மாற்றத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

சில நாட்களாக தொடர் சரிவை சந்தித்த பங்கு சந்தைகள், சரிவிலிருந்து மீண்டதோடு, முக்கிய நிறுவனங்களின் பங்கு விலையும் உயர்ந்துள்ளதால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like