வாகன ஓட்டிகளுக்கு ஓர் நற்செய்தி!
சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை முறையே 16 காசுகள், 11 காசுகள் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
நேற்றைய நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.80-க்கும், டீசல் ரூ.69.52-க்கும் விற்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், இன்று இவற்றின் விலையில் முறையே 16 காசுகள், 11 காசுகள் குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.64-க்கும், ரூ.69.41-க்கும் விற்கப்படுகின்றன.
பொதுத் துறையில் பெரிய நிறுவனமான ஐஓசியின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.
newstm.in
newstm.in