மத்திய பட்ஜெட்: பங்குச் சந்தை எப்படி இருக்கும்? 

பொதுவாக பட்ஜெட் தாக்கலுக்கு முதல் நாளிலிருந்தே, முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை மெல்ல உருவ துவங்கிவிடுவர். ஏனென்றால், பட்ஜெட் அறிவிப்புகளில், தொழில்துறை அல்லது தாங்கள் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களுக்கு அல்லது துறைக்கு எதிரான அம்சங்கள் இடம் பெற்றால், அது தங்கள் முதலீட்டை பாதிக்குமோ என்ற அச்சம் காணப்படும்.
 | 

எனினும் மத்தியில் நிலையான அரசு அமைந்து, மிகத் தெளிவான அறிவிப்புகள் வெளியாகும் பட்சத்தில், பங்குச் சந்தை ஏறுமுகமாகவே காணப்படும். அந்த வகையில் தான், கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டின் போதும், இந்திய பங்கு சந்தை குறியீட்டெண் உயர்ந்தே காணப்பட்டது. 

தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தை ஆகிய இரண்டுமே பாசிடிவ் மூடில் இயங்கின. இதனால், முதலீட்டாளர்கள் நல்ல லாபம் அடைந்தனர். எனினும், எல்லா பட்ஜெட் அறிவிப்புகளின் போதும் இந்த போக்கு காணப்பட்டதா என வரலாற்றை திரும்பி பார்த்தால் இல்லை என்பதே கசப்பான உண்மை. 

பல முறை  மத்திய பட்ஜெட் தாக்கலின் போது, பங்குச் சந்தைகள் மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளன.

மேலும் சில முறை, பட்ஜெட் உரை துவங்கியதிலிருந்து இறுதி வரை பங்குச் சந்தையில் நிறுவன பங்குகளின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போன சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. எனவே, பட்ஜெட்டில் இடம் பெறும் அறிவிப்புகளின் அடிப்படையிலேயே பங்குச் சந்தையின் போக்கு இருக்கும் என்பதால், அன்றைய நாளில் விபரம் தெரிந்த முதலீட்டாளர்கள் பெரிய அளவிலான பரிவர்த்தனையில் ஈடுபடுவதை தவிர்த்துவிடுவர்.

எனவே, பட்ஜெட் நாளன்று, சந்தையின் போக்கை ஓரளவு கணித்த பிறகே, முக்கிய பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது சிறப்பு.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP