ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்!

முன்பெல்லாம் ஃபோனுக்கு, மெஸ்ஸேஜுக்கு, இன்டர் நெட்டுக்கு என தனித் தனியாக ரீசார்ஜ் செய்து வந்தோம்.
 | 

ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்!

முன்பெல்லாம் ஃபோனுக்கு, மெஸ்ஸேஜுக்கு, இன்டர் நெட்டுக்கு என தனித் தனியாக ரீசார்ஜ் செய்து வந்தோம். பிறகு சிங்கிள் ரீசார்ஜில் இவை எல்லாவற்றையும் பெறும், காம்போ பேக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
தற்போது தொலைத்தொடர்பு சந்தையில் ஜியோவும் ஏர்டெல்லும் தான் முக்கியப் போட்டியாளர்கள். கடந்த சில நாட்களாக இவர்கள், ஒருவர் மாற்றி ஒருவர் அதிரடி சலுகைகளை அள்ளி வீசுகிறார்கள். 

அந்த வகையில் ரூ.149-க்கு அதிரடி சலுகை ஒன்றை அறிவித்திருக்கிறது ஏர்டெல் நிறுவனம். இந்த ரூ.149 ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ், உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

ஏற்கனவே ஜியோவில் இந்த 149 பிளான் செயல்பாட்டில் இருக்கிறது. அதன்படி நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, அளவில்லாத வாய்ஸ் கால் சேவை மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ் வீதம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு போட்டியாக தற்போது 2 ஜி.பி டேட்டாவை அறிவித்திருக்கிறது ஏர்டெல் நிறுவனம். அடுத்து ஜியோ என்ன திட்டத்தை வெளியிடும் என்பது தான் தற்போது வாடிக்கையாளர்களின் எதிர்ப்பார்ப்பு.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP