1. Home
  2. வர்த்தகம்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

சென்னையில் உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையிலும் இந்த பணிகளுக்கு ஊதியம் வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

காலிப் பணியிடம் : 14
சுத்தம் பராமரிப்பவர் : 10
துப்புரவுப் பணியாளர் : 04

ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரையில்

வயது வரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : http://www.assembly.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை சுயசான்றொப்பம் செய்து அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : செயலாளர், சட்டப் பேரவைச் செயலகம், தலைமைச் செயலகம், சென்னை - 600 009.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 2018 அக்டோபர் 25

மேலும் விவரங்களுக்கு: http://http://www.assembly.tn.gov.in/pressrelease/recruitment_sweeper_sanitaryworker_280918.pdf

newstm.in

Trending News

Latest News

You May Like