அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணி! விண்ணப்பித்துவிட்டீர்களா...?

தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் 2,345 செவிலியர் (நர்ஸ்) காலிப் பணியிடங்கள், மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் நிரப்பப்பட உள்ளன.
 | 

அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணி! விண்ணப்பித்துவிட்டீர்களா...?

தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் 2,345 செவிலியர் (நர்ஸ்) காலிப்பணியிடங்கள், மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் நிரப்பப்பட உள்ளன.

அரசுக் கல்லூரியிலோ, அரசால் அங்கீகரிப்பட்ட கல்லூரியிலோ பி.எஸ்சி., நர்சிங் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 

எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு  மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படும். தேர்வில் பங்கேற்பதற்கு அனைத்துப் பிரிவினருக்கும் குறைந்தப்பட்ச வயது வரம்பு 18 -ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிகப்பட்ச வயது வரம்பு, தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை www.mrb.tn.gov.in  என்று இணையதளத்தில் பெறலாம்.

மேலும், தேர்வில் பங்கேற்க விருப்புவோர்,  இதே இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் மட்டும் வரும் 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என எம்ஆர்பி தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP