வங்கியில் வேலை வேண்டுமா? 7,275 கிளர்க் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

ஐபிபிஎஸ் (IBPS) என்னும் வங்கிப்பணியாளர் தேர்வு கழகம் (Institute of Banking Personnel Selection) இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளில் 7,275 கிளர்க் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 19 தேசியமயக்கப்பட்ட வங்கிகள் இதில் அடங்கும்
 | 

வங்கியில் வேலை வேண்டுமா? 7,275 கிளர்க் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

ஐபிபிஎஸ் (IBPS) என்னும் வங்கிப்பணியாளர் தேர்வு கழகம் (Institute of Banking Personnel Selection) இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளில் 7,275 கிளர்க் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 19 தேசியமயக்கப்பட்ட வங்கிகள் இதில் அடங்கும். 

அறிவிப்பு விபரங்கள் பின்வருமாறு: 

பணியின் பெயர்: கிளர்க் (எழுத்தர்)

காலிப்பணியிடங்கள்: 7275

தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam) மற்றும் முதன்மைத் தேர்வு (Main Exam) என்ற இரு கட்டமாக நடைபெறும்.

வயது வரம்பு: 20 - 28, குறிப்பிட்ட பிரிவினருக்கு ஏற்ப வயதுவரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:  https://www.ibps.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

அறிவிப்பு வெளியான நாள்: செப்டம்பர் 18, 2018

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 10 , 2018

கட்டணம் செலுத்த கடைசி நாள்:  அக்டோபர் 10, 2018

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாட்கள்: 2018ம் ஆண்டு டிசம்பர் 8,9,15,16 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியாகும் நாள்: டிசம்பர் 2018 அல்லது ஜனவரி 2019

முதன்மைத்தேர்வு  நடைபெறும் நாள்: ஜனவரி 20, 2019

தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே நடைபெறும். இறுதியாக நேர்காணல் நடைபெறும். 

விண்ணப்ப கட்டணம்: ரூ.600 (பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர்)  ரூ.100 (தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு)

மேலும் விபரங்களுக்கு  https://www.ibps.in என்ற இணையதளத்தை அணுகவும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP