ரூ 60,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை!! 

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் காலியாக உள்ள 177 இளநிலை உதவியாளர், கணினி இயக்குபவர் உள்ளிட்ட பணியிடங்கள்நிரப்பப்பட உள்ளன. இந்த துறைக்கான சம்பளம் 20,000 முதல் 62,000 வரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

ரூ 60,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை!! 

தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 177 இளநிலை உதவியாளர், கணினி இயக்குபவர் உள்ளிட்ட பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். 

காலிப் பணியிடம் : 177
இளநிலை உதவியாளர் : 66 
கணினி இயக்குபவர் : 111

கல்வித் தகுதி:-

இளநிலை உதவியாளர் : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினி இயக்குபவர் : 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினி துறையில் சான்றிதழ் அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் ஒரு மணி நேரத்தில் 8 ஆயிரம் எழுத்துக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 19,500 முதல் ரூ. 62,000 வரையில்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : http://www.labour.tn.gov. இந்த இணையதள முகவரியில் மேற்படி பதவிகளுக்குரிய விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் புகைப்படம் ஓட்டி, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து செயலாளர், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், 8, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034 என்ற முகவரிக்கு “The Secretary, TNCWWB” என்ற பெயரில் ரூ.100/-க்கான வங்கி வரைவோலை (DD Payable at chennai) இணைத்து அனுப்பிவைக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வரவேற்கப்படும் கடைசி தேதி : 02 -11 -2018

மேலும் விவரங்களுக்கு:  http://govtjobsbest.com/wp-content/uploads/2018/10/TNCWWB-Official-Notification-Application-Form.pdf 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP