1. Home
  2. வர்த்தகம்

ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் பிரளயம்; நிறுவனங்கள் அதிர்ச்சி

ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் பிரளயம்; நிறுவனங்கள் அதிர்ச்சி

சர்வதேச அளவில் 2018ம் ஆண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை வரலாறு காணாத அளவு சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டிலும், ஸ்மார்ட்போன் விலை தொடர்ந்து சரிய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் 2018ம் ஆண்டு, 140 கோடி மொபைல் போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஐடிசி என்ற ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 4.1% குறைவு என்பது குறிப்பிடதக்கது. இது குறித்து பேசிய ஐடிசி நிறுவனத்தின் ஆய்வாளர் ரையன் ரைத், "சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் மார்க்கெட் தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது. இந்தியா, இந்தோனேசியா, தென் கொரியா, வியட்நாம் போன்ற ஒரு சில நாடுகளை தவிர மற்ற நாடுகளில் ஸ்மார்ட்போன் விற்பனை சரிந்துள்ளது. சர்வதேச அளவில் 30% ஸ்மார்ட்போன் விற்பனையை கொண்டுள்ள சீனாவில், 10% விற்பனை குறைந்துள்ளது.

தொடர்ந்து உலகின் நம்பர் 1 ஸ்மார்ட்போன் நிறுவனமாக சாம்சங் விளங்குகிறது. 2018 ஸ்மார்ட்போன் விற்பனையில் முதலிடத்தில் இருந்தாலும், சாம்சங் விற்பனையில் 8% சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்களின் அதிக விலையும், புதிய போன்கள் வாங்க தயங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணமும், இந்த சரிவுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like