குரூப்பில் பிரைவேட் மெசேஜ் - வாட்ஸ்அப் புதிய அப்டேட்!

வாடிக்கையாளர்களை கவர பல்வேறு புதிய அப்டேட்களை வெளியிட்டு வரும் வாட்ஸ்ஆப் நிறுவனம், குரூப்களில் தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பும் சேவையை விண்டோஸ் மொபைல் போன்களுக்காக கொண்டு வந்துள்ளது.
 | 

உலகின் மிகப்பெரிய மெசேஜ் செயலியான வாட்ஸ்ஆப், பல்வேறு புதிய அப்டேட்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் டார்க் மோட், ஸ்டிக்கர் உள்ளிட்ட அப்டேட்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை வாட்ஸ்அப் கவர்ந்தது. சமீபத்தில் தனது பேமெண்ட்ஸ் சேவையை இந்தியாவிலும் துவக்கி பேடிஎம், ஏர்டெல் மணி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடும் போட்டி அளிக்கவும் வாட்ஸ்அப் திட்டமிட்டு வருகிறது. இதற்கிடையே குரூப் சேட் செய்யும் போது, மற்றவர்களுக்கு தெரியாமல் நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பும் சேவையையும் கொண்டுவர வாட்ஸ்அப் கடந்த ஓராண்டாக முயற்சித்து வந்தது.

தற்போது இந்த சேவை, விண்டோஸ் மொபைல்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, குரூப் சேட் செய்து கொண்டிருக்கும் போது, யாருக்கேனும் தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்ப வேண்டுமென்றால்,

(1) அவர்கள் அனுப்பிய மெசேஜை அழுத்த வேண்டும். 

(2) அதன் பின் மேலே இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட ஆப்ஷன்ஸ் பட்டனை அழுத்தினால், 'Reply Privately' என்ற தேர்வு இருக்கும். இதை பயன்படுத்தி மற்றவர்களுக்கு தெரியாமல், குரூப்பில் தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்ப முடியும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP