1. Home
  2. வர்த்தகம்

வாட்ஸ்ஆப்பில் குரூப் வீடியோ காலிங் வசதி கன்ஃபார்ம்!

வாட்ஸ்ஆப்பில் குரூப் வீடியோ காலிங் வசதி கன்ஃபார்ம்!


உலகின் மிகப்பெரிய மொபைல் செயலியான வாட்ஸ்ஆப், குரூப் வீடியோ காலிங் சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக உறுதிசெய்துள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 150 கோடி மக்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துகிறார்கள். சேட்டிங் சேவையாக துவங்கப்பட்ட வாட்ஸ்ஆப், படிப்படியாக காலிங், வீடியோ காலிங் உள்ளிட்ட சேவைகளை அறிமுகப்படுத்தியது. தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வாட்ஸ்ஆப், புதிதாக குரூப் வீடியோ காலிங் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

இதுவரை இந்த தகவல் உறுதி படுத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது, பேஸ்புக் நிறுவனம் அதை உறுதி செய்துள்ளது. ஆனால், எப்போது இந்த சேவை நடைமுறைக்கு வரும் என எதுவும் கூறப்படவில்லை. ஒரே நேரத்தில் 4 பேருடன் வீடியோ காலிங்கில் பேசும் வசதி கொடுக்கப்படலாம் என தெரிகிறது.. இதனுடன் புதிய ஸ்டிக்கர்ஸ் சேவையும் அறிமுகப்படுத்த படவுள்ளது.

எஃப்-8 கான்பரன்ஸ் நிகழ்ச்சியில் இதை அந்நிறுவனம் உறுதி செய்தது. மேலும், போட்டோவில் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பதிவு செய்யும் சேவையை தற்போது 45 கோடி பேர் தினமும் பயன்படுத்துவதாக தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும், 200 கோடி நிமிடங்கள், காலிங் மற்றும் வீடியோ காலிங் சேவைகள் பயன்படுத்தப் படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது,.

newstm.in

Trending News

Latest News

You May Like