அடேங்கப்பா! 11 லட்ச ரூபாய்க்கு ஒரு கம்ப்யூட்டரா!

ஆப்பிள் நிறுவனத்தின் பிரபல ஐ-மேக் ப்ரோவின் புதிய மாடல் 256 ஜிபி ரேமுடன் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் விலை சுமார் ரூ.11 லட்சம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

அடேங்கப்பா! 11 லட்ச ரூபாய்க்கு ஒரு கம்ப்யூட்டரா!

ஆப்பிள் நிறுவனத்தின் பிரபல ஐமேக் ப்ரோவின் புதிய மாடல் 256 ஜிபி ரேமுடன் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் விலை சுமார் ரூ.11 லட்சம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிறுவனமான ஆப்பிள், மொபைல் மட்டுமல்லாமல் அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட கவர்ச்சிகரமான லேப்டாப், கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் அந்நிறுவனத்தின் புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், உச்சகட்ட பெர்பார்மன்ஸ் வழங்கும் ஐ-மேக் ப்ரோவை ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை 10.84 லட்சம் ரூபாய். வெளிநாடுகளில் 15,699 டாலர்களுக்கு விற்பனையாகும் இந்த ஐ மேக், 256 ஜிபி ரேம் கொண்டது. இதனுள் 2.34 GHz கொண்ட 18 கோர் பிராஸஸர் உள்ளது. கிராபிக்ஸுக்காக ரேடியானான் ப்ரோ வேகா 64X இதில் உள்ளது. 

ஆனால் இந்த மேக்கை, ஆப்பிள் ரீடெய்லரிடம் சென்று வாங்க முடியாது. இதை நாம் ஆப்பிள் நிறுவனத்திடம் ஆர்டர் செய்தால் மட்டுமே கிடைக்கும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவுக்காக ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் இரண்டு புதிய மாடல்களை வெளியிட்டது. 21.5 இன்ச் 4K ரெட்டினா டிஸ்பிளே கொண்ட ஐமேக் மாடல் 1,19,900 ரூபாய்க்கும், 27 இன்ச் 5K ரெட்டினா டிஸ்பிளே கொண்ட மற்றொரு மாடல், 1,69,900 ரூபாய்க்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP