Logo

அரசிடம் விளக்கமளிக்க உள்ளோம்.. கதறும் டிக்டாக் நிர்வாகம்.. நீண்ட அறிக்கை வெளியீடு !

 | 

லடாக் எல்லையில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், சீன பொருட்களை தவிர்க்க வேண்டும் என்ற முழக்கம் எழுந்துள்ளது. 

மேலும் சீன செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டுமென பெரும்பாலோனார் மத்திய அரசுக்கு வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்-டாக் ஆப் தற்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மற்ற செயலிகள் எப்போது நீக்கப்படும் என தெரியவில்லை. விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இந்தியாவில் டிக்-டாக் செயலி தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நிறுவனம் மத்திய அரசிற்கு விளக்கம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், இந்தியாவில் டிக்-டாக்கை பயன்படுத்தும் பயனாளர்களின் தகவல்களை பத்திரமாக வைத்திருப்பதாகவும், சீனா உட்பட எந்த வெளிநாட்டு அரசுகளுடனும் பகிரவில்லை எனவும் தெரிவித்துள்ளது. எங்கள் தரப்பு பதில் மற்றும் விளக்கமளிக்க அரசை சந்திக்க உள்ளோம்.
 
இந்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து செயல்பட தயார் எனவும் இந்தியாவின் டிக்டாக் நிறுவனத் தலைவர் நிக்கில் காந்தி கூறியுள்ளார்.

newstm.in 

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP