Logo

இப்போது தப்பிவிட்டீர்கள்; தடுமாறிவிடாதீர்கள் கமல் !

ஊரில் இருப்பவன் எல்லாம் அயோக்கியன், நான் திருத்தப் போகிறேன் என்று வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு தொடையை எல்லாம் தட்டி களம் இறங்கிவிட்டு, ஐஜேகே போன்றவர்களுடன் கூட்டணி அமைத்து, அதற்கு காரணம் கூறுவதை மக்கள் நம்ப மாட்டார்கள். உங்களை நம்மவராகவும் ஏற்க மாட்டார்கள். எப்படியோ இதுவரையில் தப்பி விட்டீர்கள், இனி தடுமாறாமல் இருப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம் இருக்கிறது கமல்.
 | 

இப்போது தப்பிவிட்டீர்கள்; தடுமாறிவிடாதீர்கள் கமல் !

தி.மு.க ., அசிங்கம், அ.தி.மு.க., அசிங்கம், பா.ம.க., அசிங்கம், பா.ஜ.க., அசிங்கம் என்று நீங்கள், ‛குணா’ பாணியில் பேசிய போது, தமிழகத்தில் கேப்டன் விட்ட இடத்தை பிடிக்க, புதிதாக ஒருவர் தோன்றி விட்டார் என மக்களுக்கு மகிழ்ச்சி தோன்றியது. அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,விற்கு மாற்று சக்தியை தேட வேண்டும் என்று, ஜெயலலிதா, கருணாநிதி உயிருடன் இருந்த போதே, மக்கள் தேட தொடங்கிவிட்டனர். 

இதன் விளைவுதான், கேப்டன், தமிழகம் முழுவதும் சுற்றி வந்த போது, அவருக்கு ஆதரவு பெருகியதற்கு காரணம். அவர், அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் வரை, மக்களுக்கு அவர் மீது நம்பிக்கை இருந்தது. 

ஊடகங்கள் அவரை காமெடியானாக மாற்றியதும், அவர் கட்சியில் இணைந்து புகழ் பெறலாம் என்று கருதி, தி.மு.க.,- அ.தி.மு.க., இ ன்ன பிறகட்சிகளில் ஓரம் கட்டப்பட்டவர் எல்லாம் சேர்ந்து, அவரை அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க செய்ததும், மக்கள் அவர் மீது மதிப்பு இழக்க தொடங்கினார்கள். 

தற்போது கருணாநிதியும் இல்லை, ஜெயலலிதாவும் இல்லை. இவர்கள் இல்லாத இந்த தேர்தல் அனைத்து கட்சியினருக்கும் புதுசு. தனியார் நிறுவனங்களில் வேலையாட்களை இடையில் கணக்கு காட்டுவதற்காக வேலை விட்டு நிறுத்தி மீண்டும் சேர்த்துக் கொள்வது போல, தலைவர்களை வெளியேற்றிவிட்டு அதிமுக, தேர்தலை சந்திக்கிறார்கள். 

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்பது எந்த அளவிற்கு மக்களிடம் எடுபடும் என்று தெரியவில்லை. அதே போல, அண்ணாவிற்கு பிறகு தலைமை பதவியை பிடித்த கருணாநிதி சுமார், 50 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த கட்சியில் தன் மகன் கூட தலைவராக இருக்க கூடாது என்று நினைத்தார். 

இப்போது தப்பிவிட்டீர்கள்; தடுமாறிவிடாதீர்கள் கமல் !

அதற்கு இணையாக ஸ்டாலின் வெற்றி பெற்று மக்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டு விட்டால், இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்கள் கூட்டணி கட்சியில் ஏற்படுவது இயல்பு. இதனால் அவருடன் எந்த வித்தில் ஒத்துழைப்பார்கள் என்ற சந்தேகமும் இருக்கிறது.

இது போன்ற சூழலில் தான், நீங்கள் களம் இறங்கி இருக்கிறீர்கள் கமல். கட்சி குழந்தை பிறந்து ஓர் ஆண்டு தான் கடந்துள்ளது. அது படுத்து தான் கிடக்கும் என்பதை ஏற்றுக் கொண்டு இருக்கீர்கள் என்ற நம்பிக்கை, உங்கள் பேச்சில் ஏற்பட்டது. 

அதற்குள், ஏனேனும் ஒரு இடுப்பில் ஏறி அமர மாட்டீர்கள் என்று காங்கிஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும் வரை நம்பிக்கை இருந்தது. ஆனால், ஸ்டாலின் புண்ணியத்தில் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. 

அதே நேரத்தில், ஐ.ஜே.கே., தலைவர் பச்சமுத்துவிடம் நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தினீர்கள், கூட்டணி அமையலாம் என்ற தகவல் பரவியது. இது உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கும் தகவல். 

இப்போது தப்பிவிட்டீர்கள்; தடுமாறிவிடாதீர்கள் கமல் !

மருத்துவக் கல்லுாரியில் இடம் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் மகன் என்று அழைக்கப்பட்ட மதன் வழியே, மாணவர்களிடம் ஒரு சீட்டுக்கு ஒரு கோடி என்று வசூலித்து ஏமாற்றியதாக, பச்சமுத்து என்ற பாரிவேந்தர் மீது நேரடியாக குற்றச்சாட்டு உள்ளது. 

இதற்காக அவர் சிறைக்கு கூட சென்றார். அதாவது, வெளிப்படையான குற்றவழக்கில் கைது செய்யப்பட்ட பாரிவேந்தருடன் கை குலுக்கினால் கூட, கை கறுத்துவிடும் என்று கருதும் கமல், கூட்டணி என்றால் மய்யம் தோன்றியதற்கான மாண்பே கெட்டு விடும். 

ஆனால் நீங்கள் நம்பாத கடவுள் புண்ணியத்தில், தி.மு.க.,வுடன், ஐ.ஜே.கே., கொள்கை கூட்டணி அமைத்து விட்டது. 

ஊரில் இருப்பவன் எல்லாம் அயோக்கியன், நான் திருத்தப் போகிறேன் என்று வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு தொடையை எல்லாம் தட்டி களம் இறங்கிவிட்டு, ஐஜேகே போன்றவர்களுடன் கூட்டணி அமைத்து, அதற்கு காரணம் கூறுவதை மக்கள் நம்ப மாட்டார்கள். 

உங்களை நம்மவராகவும் ஏற்க மாட்டார்கள். எப்படியோ இதுவரையில் தப்பி விட்டீர்கள், இனி தடுமாறாமல் இருப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம் இருக்கிறது கமல். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP