யார் கட்சி துவங்கினாலும் எங்களுக்கு கவலையில்லை: முதலமைச்சர் பழனிசாமி

யார் கட்சி துவங்கினாலும் எங்களுக்கு கவலையில்லை, உயிரோட்டம் உள்ள கட்சி அதிமுக மட்டும்தான், அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.
 | 

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், ‘டிடிவி தினகரன் குடும்பத்தினர் அதிமுகவை எவ்வளவு பாடாய்ப்படுத்தினர் என எல்லோருக்கும் தெரியும். அதிமுக அரசு யாருக்கும் அடிமையாக இல்லை. அதிமுகவை நேரடியாக எதிர்க்க ஸ்டாலினுக்கு துணிச்சல் இல்லாததால் அரசு ஊழியர்களை தூண்டிவிடுகிறார். கட்சியே தொடங்காமல் சிலர் பேசுகின்றனர். மத்தியிலும், மாநிலத்திலும் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என தீர்மானிப்பதில் தமிழக மக்கள் சிறப்பானவர்கள். உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம் நடைபெறும்; அதில் வெற்றி பெறுவது சுலபமல்ல. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற ஏதுவாக வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்றார்.  

newstm.in                

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP