‘அதிமுகவினருடன் எந்த “டச்சும்” இருக்கக்கூடாது’: தினகரன் உத்தரவு!

அதிமுகவினருடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று அமமுக நிர்வாகிகளுக்கு டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.
 | 

‘அதிமுகவினருடன் எந்த “டச்சும்” இருக்கக்கூடாது’: தினகரன் உத்தரவு!

அதிமுகவினருடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று அமமுக நிர்வாகிகளுக்கு டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை வானகரத்தில் இன்று பல கட்சிகளில் இருந்து வந்தவர்கள் அமமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டிடிவி தினகரன், ‘ அமமுகவினர், அதிமுகவினர் வீட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவோ, அவர்களிடம் தொடர்பு வைத்து கொள்ளவோ கூடாது. திமுக நமக்கு எதிரி என்றால், அதிமுகவினர் நமக்கு துரோகி’ என்றார்.

மேலும், சில தொண்டர்களை ஆசை வார்த்தைக்கூறி அழைத்துச் சென்றிருக்கலாம்; ஆனாலும் நாம் சோர்ந்து போகவில்லை என்றும் தினகரன் பேசியுள்ளார்.

சமீபத்தில் அமமுகவில் பதவி வகித்து வந்த தங்கதமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP