வெள்ளை அறிக்கையே வெள்ளை மனசுடன் தான் கேட்கப்பட்டது: டிடிவி.தினகரன்

எதிர்க்கட்சியினர் வெள்ளை மனசுடன் தான் வெள்ளை அறிக்கை கேட்கிறார்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
 | 

வெள்ளை அறிக்கையே வெள்ளை மனசுடன் தான் கேட்கப்பட்டது: டிடிவி.தினகரன்

எதிர்க்கட்சியினர் வெள்ளை மனசுடன் தான் வெள்ளை அறிக்கை கேட்கிறார்கள்  என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உலகம் சுற்றியது மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்க வேண்டும்.  வெளிநாட்டு பயணத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக கூறுகிறார். வரட்டும் பார்க்கலாம். வெளிநாட்டு பயணம் குறித்து நான் கருத்து தெரிவித்தால் பொறாமையில் பேசுகிறேன் என்பார்கள். எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெள்ளை மனசுடன் தான் வெள்ளை அறிக்கை கேட்கிறார்கள் என கூறினார்.

முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வெள்ளை அறிக்கை கேட்பவர்கள் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP