ரூ.550 கோடி செலவு செய்து ரவீந்திரநாத் குமார் வெற்றி: தங்கத்தமிழ்செல்வன்

தேனி மக்களவைத் தொகுதியில் ரூ.550 கோடி செலவு செய்து ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளதாக திமுகவின் தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
 | 

தேனி மாவட்டம் வீரபாண்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். சமீபத்தில் அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த தங்கத்தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு பேசினார். 

அப்போது அவர், "அதிமுக ஊழல் ஆட்சி என்று தெரிந்தவுடன் தான் நாங்கள் தனியே பிரிந்தோம். அதன்பின்னர் டிடிவி தினகரன் கட்சியை மக்கள் விரும்பவில்லை. இன்று திமுகவில் இருக்கிறேன். 

தேனி தொகுதியில் 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் என்னை தோற்க்கடித்தனர். தேனி மக்களவைத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரூ.550 கோடி செலவு செய்து வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக இருந்த கட்சியை பற்றி இனி பேசவிரும்பவில்லை. செத்த பாம்பை அடிக்கக்கூடாது என்று நினைக்கிறேன். 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் தி.மு.க கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற போல, வருகிற உள்ளாட்சித் தேர்தல், அதைத்தொடர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும். தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ் கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும்" என்று பேசியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP