ஜெயலலிதாவின் கோரிக்கை நிறைவேற்றம்: மத்திய அரசுக்கு அதிமுக நன்றி

ஜம்மு-காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கை நிறைவேறியுள்ளது என்று, மக்களவையில் பேசியபோது, அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 | 

காஷ்மீர் தொடர்பான மசோதா புதிய மைல்கல்லாக அமையும் என்று பேசிய ரவீந்திரநாத் குமார், காஷ்மீரில் சுதந்திர கதவுகள் திறக்கப்பட்டுள்ளன; அந்த மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பார்கள் என்றும் கூறினார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 1984-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசினார். ஜம்மு-காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கை நிறைவேறியுள்ளது. அதற்கு மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றும் ரவீந்திரநாத் குமார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கச்சத்தீவை அரசியல் லாபத்திற்காக காங்கிரஸ் கட்சி இலங்கைக்கு வழங்கியதாகவும், அதை மீட்டு தமிழகத்திடம் ஒப்படைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP