வருகிற 29,30 தேதிகளில் டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகள்!

நவம்பர் 29, 30-ந்தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்தில் சுமார் 5,000 தமிழக விவசாயிகள் பங்கேற்பார்கள் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
 | 

திருச்சியில் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விவசாயிகள் வங்கியில் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் வருகிற 29 மற்றும் 30ம் தேதிகளில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இந்திய முழுவதிலும் இருந்து சுமார் 30 லட்சம் விவசாயிகளும், தமிழகத்தில் இருந்து 5,000 விவசாயிகளும் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP