திருச்சி: துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட 1.433 கிலோ தங்கம் பறிமுதல்!

துபாயில் இருந்து விமானம் மூலம் கடத்தி வந்த சுமார் 1.433 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த திருச்சி வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

திருச்சி: துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட 1.433 கிலோ தங்கம் பறிமுதல்!

துபாயில் இருந்து விமானம் மூலம் கடத்தி வந்த சுமார் 1.433 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த மத்திய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இன்று காலை துபாயில் இருந்து திருச்சி வந்த இந்தியன் எக்ஸ்பிரக்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவுப்பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது சூலேமான் என்பவர் அனுமதியின்றி ஒரு பிரேசிலட்,, 5 வளையல்களை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. 

திருச்சி: துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட 1.433 கிலோ தங்கம் பறிமுதல்!

இதேபோல், அதே விமானத்தில் வந்த திருச்சியை சேர்ந்த பஷீர் அகமத் என்பவர் கைப்பையில் இருந்து  ரூ.46.85  லட்சம் மதிப்புடைய 1247 கிராம் எடை கொண்ட 22 தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 1.443 கிலோ தங்கத்தை  பறிமுதல் செய்த அதிகாரிகள் இரண்டு பயணிகளையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP