அஜாக்கிரதையால் நொடிப் பொழுதில் உயிரை விட்ட இளைஞர்! கவனமா இருங்க மக்களே...!

இறச்சி கடைக்காரர்களுக்கு இப்படியொரு ஆபத்தா..? கழுத்தை இறுக்கிய துணியால் சோகம்
 | 

அஜாக்கிரதையால் நொடிப் பொழுதில் உயிரை விட்ட இளைஞர்! கவனமா இருங்க மக்களே...!

இறைச்சி கடையில் கழுத்தில் அணிந்திருந்த துணி சுற்றி இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் ஏழுமலை . இவர்  திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையத்தில் உள்ள இறைச்சி கடை ஒன்றில் வேலைபார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பணிகளை முடித்த ஏழுமலை கறிவெட்டும் கட்டையை அரவை இயந்திரத்தைப்  பயன்படுத்தி சுத்தம் செய்தார். அஜாக்கிரதையால் நொடிப் பொழுதில் உயிரை விட்ட இளைஞர்! கவனமா இருங்க மக்களே...!அப்போது எதிர்பாராத விதமாக, கறிவெட்டும் போது உடுத்தும் ஆடையின் ஒரு பகுதி கயிறு இயந்திரத்தில் சிக்கியது. இதனால் அவர் கழுத்தில் சுற்றிருந்த துணி இயந்திரத்தில் சிக்கி அவரின் கழுத்தை இறுக்கியது. இதனால் மூச்சு திணறியுள்ளது. ஒருகட்டத்தில் இயந்திரத்தின் ஸ்விட்சை ஆப் செய்துவிட்டு கழுத்தில் சிக்கிய துணியை கத்தி மூலம் அகற்ற முயன்றுள்ளார்.

அஜாக்கிரதையால் நொடிப் பொழுதில் உயிரை விட்ட இளைஞர்! கவனமா இருங்க மக்களே...!

ஆனாலும் அதை எடுக்க முடியாததால்  கழுத்து  இறுக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.  கடையிலிருந்த சிசிடிவி கேமிரா மூலம் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது.  இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP