வாக்குப் பதிவு செய்த தமிழக‌ அமைச்சர்கள்

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் வாக்களிக்க, காலை எட்டு மணிக்கு அமைச்சர் வேலுமணி சுகுணாபுரத்தில் உள்ள வாக்கு சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கை பதிவு செய்தார். அதேபோல் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தனது வாக்கை பதிவு செய்தார்.
 | 

 வாக்குப் பதிவு செய்த தமிழக‌ அமைச்சர்கள்

தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.  இந்நிலையில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் வாக்களிக்க, காலை எட்டு மணிக்கு அமைச்சர் வேலுமணி சுகுணாபுரத்தில் உள்ள வாக்கு சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கை பதிவு செய்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது உள்ள இந்த வாக்கு பதிவு முறை எளிதாக உள்ளதாக தெரிவித்த அவர்,குறிப்பாக இந்த தேர்தலில் அறிமுகப்படுத்தியுள்ள யாருக்க வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் இயந்திரம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என கூறினார்.

 வாக்குப் பதிவு செய்த தமிழக‌ அமைச்சர்கள்

அதேபோல், திருச்சி சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தனது வாக்கை பதிவு செய்தார்.

 வாக்குப் பதிவு செய்த தமிழக‌ அமைச்சர்கள்

மேலும், திருச்சி அமைச்சர் வளர்மதி உறையூர் எஸ் எம் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP