இலவச மடிக்கணினி வழங்கக்கோரி மாணவியர் போராட்டம் !!

திருப்பூரில் இலவச மடிக்கணினி வழங்கக்கோரி அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 | 

இலவச மடிக்கணினி வழங்கக்கோரி மாணவியர் போராட்டம் !!

திருப்பூரில் இலவச மடிக்கணினி வழங்கக்கோரி அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் பெரிய கடை வீதியில் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளியில் கடந்த 2018-19ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு முடித்து 300 மாணவியர் வரை வெளியேறியுள்ளனர். இவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் தங்களுக்கு மடிக்கணினி வழங்கக் கோரி கடந்த கல்வியாண்டில் 12-ம் வகுப்பு படித்து முடித்து வெளியேறிய சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவியர் இன்று காலை காங்கேயம் பஸ் டெப்போ முன்பு உள்ள சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாநகர உதவி ஆணையர் நவீன்குமார் தலைமையிலான போலீசார், மாணவியருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சில மாணவிகளை கல்வி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த அழைத்து சென்றனர். பேச்சு வார்த்தைக்கு பிறகு உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மாணவியர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் காங்கேயம் சாலையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் தென்பட்டது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP