துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய இந்திய விமானப்படை தளபதி..

அமெரிக்காவின் ஹவாய் துறைமுகத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் மர்ம நபர் ஒருவர் நேற்று திடிரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவம் நடந்த போது, அந்த கப்பற்கட்டும் தளத்தில், இந்திய விமானப்படை தளபதி பதாரியா மற்றும் இந்திய விமானப்படையினர் இருந்துள்ளனர்.
 | 

துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய இந்திய விமானப்படை தளபதி..

அமெரிக்காவின் ஹவாய் துறைமுகத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் மர்ம நபர் ஒருவர் நேற்று திடிரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இச்சம்பவம் தொடர்பாக அந்நாட்டு நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடற்படை சீருடை அணிந்து வந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்திய உடன் தனது தலையில் சுட்டு கொண்டதாக, இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். இதில் 3 பேர் காயமடைந்தனர். அதில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்த போது, அந்த கப்பற்கட்டும் தளத்தில், இந்திய விமானப்படை தளபதி பதாரியா மற்றும் இந்திய விமானப்படையினர் இருந்துள்ளனர். 

இது தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் ஹவாய், பேர்ல் துறைமுகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இராணுவத் தளத்தில் இந்திய விமானப்படை தலைவர் பதாரியா மற்றும் அவரது குழுவினர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP