டிக்டாக் வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்த இளைஞர்... காரணம் என்ன தெரியுமா?

நாடு முழுவதும் டிக்டாக் வீடியோ பெரும் விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. டிக்டாக் வீடியோ மூலம் சிலர் தங்கள் திறமைகளை வெளிகாட்டி பிரபலமடைகின்றனர். சிலர் தங்கள் பதிவுகளால் வாழ்க்கையில் போராட்டங்கள், பிரச்சனைகளை சந்திப்பது மட்டுமில்லாமல் உயிர் பிரியும் சூழல் கூட ஏற்படுகிறது.
 | 

டிக்டாக் வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்த இளைஞர்... காரணம் என்ன தெரியுமா?

நாடு முழுவதும் டிக்டாக் வீடியோ பெரும் விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. டிக்டாக் வீடியோ மூலம் சிலர் தங்கள் திறமைகளை வெளிகாட்டி பிரபலமடைகின்றனர். சிலர் தங்கள் பதிவுகளால் வாழ்க்கையில் போராட்டங்கள், பிரச்சனைகளை சந்திப்பது மட்டுமில்லாமல் உயிர் பிரியும் சூழல் கூட ஏற்படுகிறது. இந்நிலையில், டிக்டாக் வீடியோ பதிவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சில மாதங்களிலேயே கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி வாக்குவாதமும் பிரச்சனையும் ஏற்பட்டதையடுத்து, மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விஜயகுமார், டிக்டாக் வீடியோவில் உருக்கமாக பேசிய வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துவிட்டு, அதன் பிறகு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

Newstm.in 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP