தி.மலை - ஐம்பொன் சிலை கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்த ஐம்பொன் சிலையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
 | 

தி.மலை - ஐம்பொன் சிலை கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்த ஐம்பொன் சிலையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

செய்யாறு அடுத்த வடதின்னலூர் கிராமத்தில் கல்யான சுந்ரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவிலில் வழக்கம் போல் இன்று காலை நடை திறப்பதற்காக வந்த கோவில் அலுவலர் கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் ஐம்பொன் சிலையை திருடி சென்றிருந்தது தெரியவந்தது. இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அனக்காவூர் போலீசார் ஐம்பொன் சிலையை கொள்ளையடித்த மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP