பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்த சைக்கோ கைது!

சென்னையில் பிறப்புறுப்பை அறுத்து ஒருவரை கொலை செய்த சைக்கோ கொலையாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 | 

பிறப்புறுப்பை அறுத்து  கொலை செய்த சைக்கோ கைது!

சென்னையில் பிறப்புறுப்பை அறுத்து ஒருவரை கொலை செய்த சைக்கோ கொலையாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னை ரெட்டேரி பகுதியில் கடந்த 25ஆம் தேதி அஸ்லாம் பாட்ஷா என்பவர் பிறப்புறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் மே 31ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனிடையே கடந்த ஜூன் 2ஆம் தேதி நாராயண பெருமாள் என்பவரும் பிறப்புறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் ரெட்டேரி பாலம் பகுதியில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

தொடர்ந்து, பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கொலை முயற்சி நடைபெற்ற சம்பவம் காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சிகிச்சை பெற்று வரும் நாராயண பெருமாளிடம் போலீசார்  விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மர்ம நபர் ஒருவர் தான் குடிபோதையில் இருந்த போது, ஓரின சேர்க்கைக்கு ஆசைக்காட்டி அழைத்து சென்று பிறப்புறுப்பை வெட்டி எடுத்து சென்றதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். 

பிறப்புறுப்பை அறுத்து  கொலை செய்த சைக்கோ கைது!

இதையடுத்து, மாதவரம் போலீசார் சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி சைக்கோ குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். மேலும், அந்த மர்ம நபரின் சிசிடிவி காட்சிகளை பொதுமக்கள் கவனித்திற்காக வெளியிட்டனர். இந்நிலையில், பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அந்த சைக்கோ கொலையாளியை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர். 

முதற்கட்ட விசாரணையில், அந்த கொலையாளி மானாமதுரை சேர்ந்த முனியசாமி(35) என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் குற்றச்செயலுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP