மருத்துவமனையில் மருத்துவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில், மருத்துவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

மருத்துவமனையில் மருத்துவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில், மருத்துவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சாய்பாபா காலனி, அழகேசன் சாலை பகுதியில் வசிப்பவர் மருத்துவர் பழனிச்சாமி (வயது 49).  அவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த நான்கு வருடங்களாக இயன்முறை மருத்துவர் ஆக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், இன்று அவர் வழக்கம்போல மருத்துவமனைக்கு பணிக்கு வந்தார். அப்பொழுது மருத்துவமனை வளாகத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென மயங்கி தரையில் விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு தூக்கிக் கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மருத்துவர் பழனிசாமிக்கு மனைவி, ஒரு மகளும் உள்ளனர். திடீர் மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் மயங்கி விழுந்து மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அங்கு உள்ள மருத்துவர்கள் இடையே சோகத்தை உருவாக்கியுள்ளது.


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP