Logo

ஒரு ரூபாய் கட்டணத்தில் வாடகைக்கு மின்சார ஸ்கூட்டர்.. எங்க தெரியுமா?

சென்னையில் மெட்ரோ பயணிகளின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளை மெட்ரோ நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் மின்சார ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் ஷேர் ஆட்டோ, ஷேர் கார் வசதி மற்றும் வாடகை சைக்கிள்கள் என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
 | 

இதேபோல், திருமங்கலம், விமானநிலையம், சின்னமலை உள்ளிட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாடகை மோட்டார் சைக்கிள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவை தவிர மீனம்பாக்கம், நங்கநல்லூர், சென்டிரல், ஆலந்தூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பயணிகளே கார்களை ஓட்டி செல்லும் வகையில் கார்கள் வாடகைக்கு வழங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இவைகளை பயணிகள் எளிதாக பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக தனி செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மெட்ரோ ரெயில் பயணிகளை அதிகப்படுத்தவும், மெட்ரோ பயணத்தை ஊக்குவிக்கவும் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாடகைக்கு மின்சார ஸ்கூட்டர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 6 மின்சார ஸ்கூட்டர்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவை தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அளிக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டருக்கு வாடகையாக ஒரு நிமிடத்துக்கு ஒரு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஸ்கூட்டர்களை எடுத்து செல்பவர் எங்கு செல்கிறார்? என்பதை கண்காணிக்கும் ஜி.பி.எஸ் வசதிகள் உள்ளது.

மேலும் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம். மேலும், பயணிகள் ஆலந்தூர் ரயில் நிலையத்தில் ஸ்கூட்டரை வாடகைக்கு எடுத்தாலும், அருகில் உள்ள எந்த மெட்ரோ ரயில் நிலையங்களிலும் ஸ்கூட்டரை ஒப்படைக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகளின் வரவேற்பை பொறுத்து ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும், கிண்டி, வடபழனி மற்றும் அண்ணாநகர் டவர் ஆகிய ரயில் நிலையங்களிலும் மின்சார ஸ்கூட்டர் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP