Logo

அதுவெறும் சளி தான்.. அலட்சியம் காட்டிய பிரேசில் நாட்டு அதிபருக்கு கொரோனா தொற்று !

 | 

உலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் 2-வது இடத்தில் உள்ளது. இதுவரை அந்நாட்டில் 16 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 66,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

பிரேசிலில் கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே, அதனை சிறிய காய்ச்சல் என்று அந்நாட்டு ஜெயிர் பொல்சனோரா கூறி வந்தார்.

அந்நாட்டு சுகாதாரத்துறை எச்சரித்தப்போதும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நடவடிக்கை எடுக்க மறுத்தார். மாறாக சுகாதாரத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்தார்.

மேலும் சமூக விலகலை பின்பற்றாமலும், பொது இடங்களில் மாஸ்க் அணியாமலும் கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்டடதாக சர்ச்சையில் சிக்கினார் அதிபர்.

இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக அதிபர் பொல்சனோரோ தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு தலைநகர் பிரேசில்லாவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் , நேற்று முன் தினம் முதல் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.

இதனைத்தொடர்ந்து தனக்கு உடல் சோர்வும், காய்ச்சலும் இருந்தது. இதனால் நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். எனது கொரோனா பரிசோதனைகள் முடிவுகள் வெளிவந்துள்ளன.

அதில் எனக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது. அதற்காக ஹைட்ரோகுளோகுவைன் மற்றும் அஸித்ரோமைசின் ஆகிய மருந்துகளை எடுத்து வருகிறேன். எனினும் எனக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கின்றன. நான் தற்போது நன்றாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

அதிபருக்கு ஏற்கனவே முறை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த 3 சோதனைகளிலும் அவருக்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என்ற முடிவு வந்த நிலையில், தற்போது அவருக்கு கொரோன பாசிட்டிவ் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in 

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP