Logo

பப்ஜி கேமில் ரூ.16 லட்சத்தை செலவழித்த சிறுவன்.. தந்தை எடுத்த அதிரடி முடிவு ! 
 

 | 

நாடு முழுவதும் பப்ஜி விளையாட்டு மோகம் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஆட்டிபடைக்கிறது. தற்போது ஊரடங்கு காரணமாக அனைவரும் வீடுகளில் முடங்கியிருப்பதால் பொழுதுபோக்கிற்காக அதற்கு அடிமையாகி வருவது தெரியவருகிறது. 

அந்த வகையில், பஞ்சாப் மாநிலத்தில் 17 வயது சிறுவன் பப்ஜி கேம்-ஐ விளையாடி வந்துள்ளார். அதற்கான தனது அம்மாவின் ஸ்மார்ட்போனை அவர் பயன்படுத்தியுள்ளார்.

சிறுவன் மொபையில் அதிகம் நேரம் செலவிடுவதைக் கண்டு பெற்றோர் கேட்கும் போது, ஆன்லைனில் படிப்பதாக அவர் பொய் கூறி பெற்றோரை சமாளித்துள்ளார்.

இந்நிலையில், பப்ஜி கேமில் அடுத்தடுத்த கட்டங்களை எட்டவும், புதிய அப்கிரேடுகளை செய்யவும் அவர் தனது பெற்றோரின் மூன்று வங்கிக் கணக்குகளை பயன்படுத்தியுள்ளார்.

இவ்வாறாக, ரூ.16 லட்சத்தை அந்தச் சிறுவன் செலவழித்துள்ளார். வங்கியில் இருந்து வந்த மெசெஜ்களை பெற்றோருக்கு தெரியாமல் உடனே அந்த சிறுவன் அழித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் வங்கி கணக்கில் இருந்து பணம் குறைவதை அறிந்த சிறுவனின் தந்தை அதிர்ச்சியடைந்துள்ளார். அரசு அலுவலரான சிறுவனின் தந்தை பணத்தை மீட்டுத்தர வேண்டும் என  போலீசில் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், பணத்தை மீட்க இயலாது என போலீசார் தெரிவித்துவிட்டனர். 

இதையடுத்து, பணத்தின் அருமை, உழைப்பின் அருமை தெரியவேண்டும் என்பதற்காக சிறுவனை இருசக்கர வாகனங்கள் சீர் செய்யும் மெக்கானிக் கடையில் தந்தை கோபத்தில் சேர்த்துள்ளார்.
 

newstm.in 

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP