மாநில அளவிலான சதுரங்கப்போட்டி: 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஆடவர், மகளிருக்கான சதுரங்க போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
 | 

மாநில அளவிலான சதுரங்கப்போட்டி: 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஆடவர், மகளிருக்கான சதுரங்க போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். 

திருச்சி அளுந்தூர் தனியார் பள்ளி அரங்கில் திருச்சி மாவட்ட செஸ் சங்கம் சார்பில் 15 வயதிற்குட்பட்டோருக்கான 32வது மாநில அளவிலான சப்-ஜூனியர் சதுரங்க போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கி நடைபெற்று வரும் இப்போட்டி வரும் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் நாள் ஒன்றுக்கு 2 சுற்றுகள் வீதம் 8 சுற்றுகள் நடத்தப்படுகிறது.

மாநில அளவிலான சதுரங்கப்போட்டி: 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். ஆடவர், மகளிர் பிரிவில் முதல் 10 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகைகள் மற்றும் தரவரிசைப்பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு புள்ளிளும் வழங்கப்படும் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் வரும் ஜீலை மாதம் திருச்செங்கோட்டில் நடைபெறும் தேசிய அளவிலான சதுரங்கப்போட்டியில் கலந்துகொள்வர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP