Logo

விண்வெளி ஆராய்ச்சிக்கு உயிர் கொடுத்த 'கெப்லர்' விடைபெறுகிறது!

சுமார் 2600 கிரகங்களுக்கும் மேல் கண்டுபிடித்து விண்வெளிஆராய்ச்சியின் மைய புள்ளியாக விளங்கிய நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி, தனது 9 ஆண்டு பயணத்தை விரைவில் முடித்துக் கொள்ள இருக்கிறது.
 | 

விண்வெளி ஆராய்ச்சிக்கு உயிர் கொடுத்த 'கெப்லர்' விடைபெறுகிறது!

சுமார் 2600 கிரகங்களுக்கும் மேல் கண்டுபிடித்த நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி, தனது 9 ஆண்டு பயணத்தை விரைவில் முடித்துக் கொள்ள இருக்கிறது. 

விண்வெளியில் மனிதன் வாழும் தட்ப வெப்ப சூழல்கள் கொண்ட கிரகங்கள் உள்ளனவா, என்பதே விண்வெளி ஆராய்ச்சியின் மிகப்பெரிய கேள்வியாக இருக்க முடியும். இந்த கேள்விக்கு நாசா கண்டுபிடிக்க விடை தான் கெப்லர் தொலைநோக்கி. 2009ம் ஆண்டு, நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்களை கண்டறியும் இலக்கோடு, கெப்லர் விண்ணில் பாய்ந்தது. 

இந்த 9 வருட காலத்தில், 2600க்கும் மேற்பட்ட கிரகங்களை கெப்லர் கண்டறிந்துள்ளது. 2009ம் ஆண்டு, அப்போதைய உச்சகட்ட தொழில்நுட்பத்தை கொண்டு, மிக நவீனமான டிஜிட்டல் கேமராவுடன் கெப்லர் உருவாக்கப்பட்டது. விண்வெளியில், இரவு நாம் பார்க்கும் 20% முதல் 50% வரையிலான நட்சத்திரங்களை சுற்றி, பூமியை போன்ற சிறிய கிரகங்களை இருக்கும் என கெப்லரின் ஆய்வுகளை வைத்து சமீபத்தில் அறியப்பட்டது. 

தொடர்ந்து தனது பணிகளை செய்ய கெப்லருக்கு போதுமான மின் வசதி இல்லாததால், அதை கைவிடும் நேரம் வந்துவிட்டதாக நாசா தெரிவித்துள்ளது. "கிரகங்களை கண்டுபிடிக்க நாசா எடுத்த முதல் முயற்சியாக கெப்லர் விண் தொலைநோக்கி, நமது எதிர்பார்ப்பை தாண்டி வெற்றி பெற்றுள்ளது. விண்வெளி ஆராய்ச்சிக்கு இதன் ஆய்வுகள் வழி வகுத்துள்ளன"என நாசா திட்டங்கள் இயக்குனர் தாமஸ் சுர்புச்சென் தெரிவித்துள்ளார். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP