Logo

தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி கைது

தெலங்கானா மாநிலம்,கோதண்கல் தொகுதிக்கு வருகை தரும் முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி அறிவித்திருந்தார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
 | 

தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி கைது

தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை போலீசார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற 7-ஆம் தேதி நடக்க உள்ளது. இதையடுத்து அங்கு பிரசார களம் சூடு பிடித்துள்ளது. தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவரும், முதல் அமைச்சருமான சந்திரசேகர் ராவ் சூறாவளி பயணம் மேற்கொண்டு பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார். இன்று மாலை கோதண்கல் தொகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார்.

அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டி போட்டியிடுகிறார். இதற்கிடையே, கோதண்கல் தொகுதிக்கு வருகை தரும் சந்திரசேகர் ராவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று ரேவந்த் ரெட்டி அறிவித்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில் இன்று அதிகாலை ரேவந்த் ரெட்டியை அவரது வீட்டில் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது சகோதரர், பாதுகாவலர், வீட்டு காவலாளி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

சந்திரசேகர் ராவ் தேர்தல் பிரசார பேரணியையும், பொதுக்கூட்டத்தையும் தடுத்து நிறுத்த ரேவந்த் ரெட்டியும் அவரது ஆதரவாளர்களும் முயற்சி செய்வார்கள் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP