ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2!!!

துருக்கியில் சாண்டா சோபியா தேவாலயமும், நிகோசியாவில் பல தேவாலயங்களும் இப்படிதான் அழிக்கப்பட்டன. இதே போலதான் இந்துக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட அயோத்தியாவின் அழிவும் ஏற்பட்டுள்ளது.
 | 

ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2!!!

திலீப் பத்கோங்கர் : அயோத்தியா விவகாரத்தை பற்றிய தங்களின் கருத்து.

வி.எஸ். நைபால் : அயோத்தியாவின் ராம்ஜன்ம பூமியில் கோவில் இல்லை என்ற கூறுபவர்கள் ஒரு முக்கிய விஷயத்தை மறந்து விட்டதாகவே நான் நினைக்கிறேன். இதற்கு முதலில் பாபர் என்ற மொகலாய பேரரசர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் அனைவரும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். 

தான் தோற்கடித்து அடிமையாக்கும் நாடுகளுக்கு மதிப்பளிக்க விரும்பாதவர். அவர் வெற்றியடைந்துள்ள அனைத்து நாடுகளிலும், அவர்கள் முக்கியமாக கருதுவதை அழிப்பதே அவரது சிந்தனையாக இருந்தது. 

துருக்கியில் சாண்டா சோபியா தேவாலயமும், நிகோசியாவில் பல தேவாலயங்களும் இப்படிதான் அழிக்கப்பட்டன. இதே போலதான் இந்துக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட அயோத்தியாவின் அழிவும் ஏற்பட்டுள்ளது. 

திலீப் பத்கோங்கர் : அயோத்தியாவில், மசூதிகளின் மீது ஏறி அவற்றை அழிக்க முயற்சித்த மக்கள் யாரும் காவி உடையணிந்து, நெற்றி நிறைய திருநீர் பூசிக்கொண்டிருந்தவர்கள் அல்ல. இதில் ஈடுபட்டிருந்த அனைவரும் இளைஞர்கள். அவர்கள் ஏன் இப்படிபட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று நினைக்கிறீர்கள் ??

வி.எஸ். நைபால் : இதற்கு உடைகள் முக்கியம் என்று எனக்கு தோன்றவில்லை. அவர்களின் வேட்கை தான் இத்தகைய செயல்களை அவர்களை செய்ய வைத்துள்ளது.

திலீப் பத்கோங்கர் : இந்தியாவின் பல பகுதிகளிலும், பெண் கடவுள்களின் உருவ சிலைகளின் பல பாகங்களும் சிதைக்கப்பட்ட நிலையில் இருக்கின்றன. இவை நமது நாட்டை ஆக்ரமித்து ஆட்சி புரிந்த பல அரசர்களாலும் ஏற்படுத்தப்பட்டவை. இதனை இந்துத்துவா சக்திகள், பிறரின் உணர்ச்சிகளை தூண்டிவிடுவதற்கான ஆயுதமாக உபயோகித்து வருகின்றனர். இதை வளர விடுவது நிச்சயமாக சரியல்ல என்னும் நிலையில், இவற்றை எவ்வாறு தடுப்பது??

வி.எஸ். நைபால் : இந்தியாவில் நடைபெற்று வரும் இத்தகைய செயல்களுக்கு அயல் நாடுகளின் பாசிசம் என்ற வார்த்தையை உபயோகிப்பது மட்டும் போதுமானதாகாது. இந்தியா ஓர் எழுச்சிக்கான பயணத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் அதை புரிந்து கொண்டு இத்தகைய கருத்துக்களுக்கு செவி சாய்க்காமல், இதனை நம் அறிவு சார்ந்த மாற்றத்திற்கு கொண்டு செல்வதே நமது எதிர்காலத்திற்கு நல்லது.

தொடரும்.........

ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1!!!

ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3!!!

ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4!!!

ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5!!!

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP