Logo

மாமியார் உடைத்தால் மண்சட்டி...!

அரசின் முடிவுகள் நாட்டிற்கும், மக்களுக்கும் தீமை ஏற்படுத்தும் என்றால் அதில் நீதிமன்றங்கள் தலையிட்டு மாற்றத்தை கொண்டு வர முயற்சி செய்யலாம். அது கொள்கை முடிவாக இருக்கும் போது நீதிமன்றங்கள் கூட தலையிட முடியாது.
 | 

மாமியார் உடைத்தால் மண்சட்டி...!

அரசின் முடிவுகள் நாட்டிற்கும், மக்களுக்கும் தீமை ஏற்படுத்தும் என்றால் அதில் நீதிமன்றங்கள் தலையிட்டு மாற்றத்தை கொண்டு வர முயற்சி செய்யலாம். அது கொள்கை முடிவாக இருக்கும் போது நீதிமன்றங்கள் கூட தலையிட முடியாது. இது பல வழக்குகளில் உச்ச நீதிமன்றமே ஒப்புக் கொண்ட விஷயம். ஆனால் பழம் தின்று கொட்டை போட்ட காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்ய வில்லை என்றதும் உச்ச நீதிமன்றங்கள் எல்லா விஷயத்திலும் தலையிடுவதை வழக்கமாக கொண்டு விட்டன. மத்திய அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயம் என்றால் உச்ச நீதிமன்றத்திற்கு அல்வா சாப்பிட்ட போல இருக்கிறது. சபரிமலை தீர்ப்பு, சிபிஐ நியமன விவகாரம், கள்ளக்காதல் தப்பில்லை என்றது போன்ற பல பிரச்னைகளில் நீதிமன்றம், மத்திய அரசுக்கு எதிராக இருப்பது காங்கிரஸ் கட்சியின் பி டீம் போல செயல்படுவதாகவே தோன்றுகிறது. 

மாமியார் உடைத்தால் மண்சட்டி...!

இதற்கு சமீபத்திய உதாரணம் இடைக்கால பட்ஜெட்டை ரத்து செய்ய வேண்டும் என்று வக்கீல் எம் சர்மா மனுத்தாக்கல் செய்துள்ளது. அதனை உச்சநீதிமன்றமும் விசாரணைக்கு ஏற்றுள்ளது. கடந்த கால நிகழ்வுகளை பார்த்தால் இந்த மனுவை விசாரணை செய்யாமலேயே தள்ளுபடி செய்ய வேண்டும். அப்படிப்பட்டவர்கள் இப்போது கறுப்பு அங்கியில் இல்லை என்பதால் மனு ஏற்கப்பட்டுள்ளது. 

2014ம் ஆண்டில் அது நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்தார். அதே போல 1991-92ம் ஆண்டில் நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் தாக்கல் செய்ததும் இடைக்கால பட்ஜெட் தான். 2004ம் ஆண்டு தேர்தல் காரணமாக யஷ்வன் சின்கா இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்தார். 

கடந்த காலங்களில் காங்கிரஸ், பாஜ அரசுகளின் போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் நீதிமன்றமோ, எம் சர்மா போன்ற அறிவு ஜீவி வக்கீல்களோ இல்லை.  ஆனால் இப்போ இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டதற்கு காரணம் நடப்பது மோடி அரசு என்பதால் தான். மோடியை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை நிலைப்பாடுதான் இப்போதுள்ள நிலை. 
இந்த நிலை நாட்டிற்கு நல்லது இல்லை என்பதுதான் வேதனை அளிக்கிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP