Logo

நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போல ஆக முடியாது மோடி - காங்கிரஸ் தலைவர் விமர்சனம்

நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போல ஒருவர் வர வேண்டுமானால் தியாகங்களைச் செய்ய வேண்டும். நேரு, ராஜீவைப் போல உடையணிவதாலோ, இந்திரா காந்தி போல வெளிநாடு செல்வதாலோ அவர்களைப் போல ஆகிவிட முடியாது என்றார் காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமது படேல்.
 | 

நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போல ஆக முடியாது மோடி - காங்கிரஸ் தலைவர் விமர்சனம்

நேருவைப் போலவே மேலங்கி அணிவதால் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி, அவரைப் போல ஆகிவிட முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமது படேல் விமர்சித்தார். அதைப்போலவே வெளிநாடுகளுக்குச் செல்வதால் இந்திரா காந்தியாகவும், குர்தா அணிவதால் ராஜீவ் காந்தி போலவும் மோடி ஆக முடியாது என்றும் அஹமது படேல் கூறினார். குஜராத் மாநிலம், ஆரவள்ளி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது:

நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போல ஒருவர் வர வேண்டுமானால் தியாகங்களைச் செய்ய வேண்டும். நேரு, ராஜீவைப் போல உடையணிவதாலோ, இந்திரா காந்தி போல வெளிநாடு செல்வதாலோ அவர்களைப் போல ஆகிவிட முடியாது. பாகிஸ்தானுக்கு புரியும் மொழியில் பாடம் புகட்ட வேண்டும் என்று மோடி முன்பு கூறி வந்தார். இந்திய எல்லையில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகளை அனுப்பிக் கொண்டிருக்கும்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டுக்கு காதல் கடிதம் எழுதிக் கொண்டிருப்பதாக மோடி விமர்சித்தார்.

ஆனால், மோடி பிரதமரான பிறகு என்ன நடந்தது? பாகிஸ்தானுக்கு அவர் பாடம் புகட்டினாரா? தனது பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு மோடி அழைப்பு விடுத்தது எல்லோருக்கும் தெரியும். அதைப்போலவே இவரும் அழையா விருந்தாளியாக அங்கு பிரியாணி சாப்பிடச் சென்றார் என்று தெரிவித்தார் அஹமது படேல்.

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவின்போது, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு நல்லெண்ண அடிப்படையில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதேபோல, நவாஸ் ஷெரீஃப் இல்ல திருமண விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் நடவடிக்கையாக இது கருதப்பட்டது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP