மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம்!

மேற்குவங்க மாநில முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா வின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 | 

மேற்குவங்க மாநில முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா உடல் நலக்குறைவு காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நேற்று கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆளுநர் ஜெகதீப் தன்கார் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நலம் குறித்து நலம் விசாரித்தனர். 

இந்நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ரத்த அழுத்தம் அவருக்கு அதிகமாக இருந்த நிலையில், தற்போது அது சீராக இருக்கிறது என்றும் இருந்தபோதிலும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP