பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தான் குடிமக்கள், வீரர்கள் கொல்லப்படவில்லை: சுஷ்மா சுவராஜ்

பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தான் குடிமக்கள், வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
 | 

பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தான் குடிமக்கள், வீரர்கள் கொல்லப்படவில்லை: சுஷ்மா சுவராஜ்

பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தான் குடிமக்கள், வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப் படை, பிப்ரவரி 26 –ந் தேதி வான்வழி தாக்குதல் நடத்தியது. புல்வாமாவில் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நோக்கில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. 

இந்நிலையில், குஜராத்தில் பாஜக மகளிர் அணியினர் இடையே வெளியுறவுத் துறை அமைச்சா் சுஷ்மா சுவராஜ் உரையாற்றினாா். அப்போது பேசிய அவா், "புல்வாமா பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாலகோட்டில் சுய பாதுகாப்புக்காகவே இந்தியா தாக்குதல் நடத்தியது. இதுகுறித்து சர்வதேச நாடுகளுக்கும் இந்தியா தெரியப்படுத்தியது.

பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தான் குடிமக்கள், அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்று விமானப் படையிடம் இந்தியா வலியுறுத்தியதும் உலக நாடுகளிடம் தெரிவிக்கப்பட்டது. 

அதேபோல், புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம் மீது மட்டுமே தாக்குதல் நடத்த வேண்டும் என்று ராணுவத்தையும் இந்திய அரசு கேட்டுக் கொண்டிருந்தது. இதன்படி பாகிஸ்தான் குடிமக்கள், வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவாறு, இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.

இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியபோது, இந்தியாவை உலக நாடுகள் அனைத்தும் ஆதரித்தன. உலக அளவில் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளது" எனத் தொிவித்துள்ளாா். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP