Logo

ம.பி: பணி நேரத்தில் குத்தாட்டம் போட்ட அரசு ஊழியர்கள்; வைரலாகும் வீடியோ

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு அரசு அலுவலகத்தில், பணி நேரத்தின் போது அதிகாரிகள் இணைந்து டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
 | 

மத்திய பிரதேசம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுஅமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு அரசு அலுவலகத்தில் நேற்று ஒரு ஊழியருக்கு பிறந்தநாள் என்பதால் கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து அங்குள்ள அரசு ஊழியர்கள் பணி நேரத்தின் போது கதவை பூட்டிவிட்டு உள்ளே குத்தாட்டம் போட்டுள்ளனர். 'பத்மாவத்' படத்தின் 'கூமர்' உள்பட பல்வேறு இந்தி பாடல்களுக்கு அவர்கள் டான்ஸ் ஆடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இந்த செய்தி அறிந்த தேவாஸ் மாவட்ட ஆட்சியர், சம்மந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததுடன் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP