ஜம்மு-காஷ்மீர்: தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 | 

ஜம்மு-காஷ்மீர்: தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். பதுங்கியிருந்த மேலும் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று காலை அந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், கொல்லப்பட்ட தீவிரவாதி இர்ஃபான் ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு படை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP