இந்திய போஸ்ட் ஏடிஎம் கம் டெபிட் கார்ட் வசதி - தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய விஷயங்கள்!!!

இதர வங்கிகளை போல, சேமிப்புக் கணக்கு, நிலையான வைப்புத் தொகை, மாத வருமான திட்டம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், ஆர்.டி எனப்படும் தொடர்ச்சியான வைப்புத் தொகை திட்டம், சிசான் விகாய் பத்ரா, சுகன்யா சமிர்தி போன்ற பல நிதி சேவைகள் அனைத்தையும் வழங்கி வருகிறது இந்திய அஞ்சல் துறை.
 | 

இந்திய போஸ்ட் ஏடிஎம் கம் டெபிட் கார்ட் வசதி - தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய விஷயங்கள்!!!

இதர வங்கிகளை போல, சேமிப்புக் கணக்கு, நிலையான வைப்புத் தொகை, மாத வருமான திட்டம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், ஆர்.டி எனப்படும் தொடர்ச்சியான வைப்புத் தொகை திட்டம், சிசான் விகாய் பத்ரா, சுகன்யா சமிர்தி போன்ற பல நிதி சேவைகள் அனைத்தையும் வழங்கி வருகிறது இந்திய அஞ்சல் துறை. 

இந்நிலையில், அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு தொடங்க விரும்புபவர்கள் ரூ.20 ஐ முதல் தொகையாக செலுத்தி கணக்கை தொடங்குவதன் மூலம், ஏடிஎம் கார்ட் வசதியும் பெறலாம். 

இதை தொடர்ந்து, அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கை தொடங்க விரும்புவோர் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் :

1. இந்திய போஸ்ட் சேமிப்புக் கணக்கின் தற்போதைய வைப்புத் தொகைக்கான வட்டியாக ஆண்டிற்கு 4 சதவீதம் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள், நிர்ணயிக்கப்பட்ட இலவச பரிவர்தனைகளுக்கு மேல் பரிவர்தனை மேற்கொண்டால், ஓரோர் பரிவர்தனைக்கும் அதற்கு தகுந்த தனி கட்டணத்தை செலுத்த வேண்டும்.

2. தற்போது இந்திய போஸ்டல் துறை, ஏடிஎம் கார்டை பயன்படுத்தி, ஓர் நாளைக்கு ரூ.25,000 வரை பணம் எடுக்க அனுமதியளிக்கிறது. இந்நிலையில் ஓர் முறைக்கு ரூ.10,000 வீதம், 5 முறை கார்ட் பரிவர்தனைகள் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

3. பெருநகரங்களில் பிற வங்கிகளில் இந்திய போஸ்ட் ஏடிஎம் கார்டை பயன்படுத்துவோருக்கும் உதவும் வகையில், ஓர் மாதத்திற்கு மூன்று பரிவர்தனைகள் இலவசமாக மேற்கொள்ளலாம்.

4.  பெருநகரங்கள் அல்லாத பிற நகரங்களில், இந்திய போஸ்ட் ஏடிஎம் கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ஓர் மாதத்திற்கு ஐந்து பரிவர்தனைகள் மேற்கொள்ளலாம் என்று அஞ்சல் துறை அறிவித்துள்ளது. 

5. இந்திய போஸ்டிற்கான சேமிப்புக் கணக்கை பணத்தால் மட்டுமே திறக்க இயலும். இதற்கான காசோலை வசதியைப் பெறுவதற்கு ரூ.500 செலுத்த வேண்டும். மேலும், இந்த கணக்கை பராமரிப்பதற்கும் வகையில் குறைந்தபட்சம் 500 ரூபாயாவது வைத்திருக்க வேண்டும் என்று அஞ்சல் துறை அறிவித்துள்ளது.. 

இந்த சேமிப்பிற்கான முக்கிய அம்சங்கள் : 

- மாதாந்திர இருப்பு தொகையை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

- சேமிப்பு கணக்கில் சராசரி இருப்பு தொகை வைக்க வேண்டியது இல்லை.

- இலவச காலாண்டு கணக்கு அறிக்கை வெளியிடப்படும்.

- குறிப்பிட்ட தொலைபேசி எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் மூலம் மினி அறிக்கை அனுப்பப்படும்.

- கியூஆர் அறிக்கை மூலம் எளிமைப்படுத்தப்பட்ட வங்கி சேவைகள்.

- உடனடி நிதி பரிமாற்றம்.

- எளிதான முறையில் பில் கட்டணம் மற்றும் ரீசார்ஜ் சேவை.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP